பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவிய போட்டி….

0 649
Stalin trichy visit

டிசைன் ஓவிய பள்ளி சார்பில் சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி ரம்யாஸ் ஹோட்டல் செளபாக்யா குளிர் அரங்கில் ஆகஸ்ட் 13 &14 ஆகிய தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் மாலை 4-30 மணி வரை  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெறுகிறது.

எல்கேஜி, யூகேஜி மாணவர்களுக்கு வண்ணம் தீட்டுதலும், 1,2,3 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
எனது செல்லப்பிராணி தலைப்பிலும், 4, 5 ,6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எனது சிறந்த விடுமுறை நினைவுகள் தலைப்பிலும், 7,8,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு
எனது கனவு இந்தியா தலைப்பிலும் ஓவியப் போட்டி நடைபெறுகிறது.

ஓவியப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு அனுமதி இலவசம். ஓவியம் போட்டியில் பங்கேற்பாளர்களுக்கு ஓவியப் போட்டிக்கான ஓவிய அட்டைகள் மட்டும் வழங்கப்படும். ஓவியம் வரைவதற்கும் வண்ணம் தீட்டுவதற்கும் உரிய உபகரணம் பொருட்களை மாணவர்கள் கொண்டு வர வேண்டும். போட்டியில் பங்கேற்க கூடிய மாணவர்கள் பள்ளி அடையாள அட்டையுடனும் சீருடையுடனும் அவர்தம் பெற்றோர்கள் பொறுப்பில் வந்து செல்ல வேண்டும்.

ஓவியப் போட்டிக்கான நேரம் ஒரு மணி நேரம் ஆகும் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த மூன்று ஓவியத்தினை தேர்வு செய்து முதல், இரண்டு, மூன்றாம் நிலை பெறும் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும் தங்கம், வெள்ளி நாணயங்களும் வழங்கி கௌரவிக்கப் படுவார்கள்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் தேசிய விருது பெற்ற ஓவியர் விஸ்வம், பத்மஸ்ரீ தாமோதரன், ஓவியர் குமார் உள்ளிட்டோர் பங்கேற்று பரிசளித்து சிறப்பிப்பார்கள். ஓவியக் போட்டிக்கான ஏற்பாட்டினை டிசைன் ஓவியப் பள்ளியின் நிர்வாக இயக்குனர் மதன், முதல்வர் நஸ்ரத் பேகம் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.