வேளாண் வணிகத்துறை சார்பில் கண்காட்சி : அமைச்சர்கள் பார்வையிட்டனர்
திருச்சி எஸ்.ஆர்.எம். ஓட்டலில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் கடன்வசதி பெறும் திட்டம் குறித்த மாநில அளவிலான கருத்தரங்கத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில்மகேஸ் ஆகியோர் தொடங்கி வைத்து. வேளாண் வணிகத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கிணைப்பார்வையிட்டனர். இதில் அரசு செயலாளர் மற்றும் ஆணையர் வேளாண் உற்பத்தி சமயமூர்த்தி, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் நடராஜன், மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி தலைமை பொது மேலாளர் வெங்கடகிருஷ்ணா, தஞ்சை தேசிய உணவுத் தொழில்நுட்ப மேலாண்மை இயக்குநர் லோகநாதன், மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின்குமார், தியாகராஜன், பழனியாண்டி, துணைமேயர் திவ்யா, மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.