பாவலர் முவ.பரணர்  பத்தாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்

0 269
Stalin trichy visit

தமிழக்கலை இலக்கியப் பேரவையின் சார்பாக நேற்று 11-08-2022 வியாழன் மாலை 6 மணிக்கு திருச்சிராப்பள்ளி ரவி சிற்றரங்கத்தில் பாவலர் பரணர் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

பாவலர் பரணர் ஐயா அவர்களது பெயர்த்தி செல்வி சாலினி அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன்
நினைவேந்தல் கூட்டம் தொடங்கியது.

கூட்டத்திற்கு மூ.த.கவித்துவன் தலைமை ஏற்றார்.

தோழர் முவ. இரெத்தினம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

பாவாணர் தமிழ் இயக்கத்தின் இயக்குனர் பேராசிரியர் முனைவர் கு. திருமாறன் அவர்கள் பரணரின் அகம் மற்றும் புறப் பண்புகள் குறித்து விரிவாக விளக்கிப் பேசினார்.

“தமிழரும் பழமொழிகளும்” நூலின் ஆசிரியர் புலவர் பி.தமிழகன் அவர்கள் பரணர் அவர்களுடைய நினைவேந்தலை ஒட்டி தமிழரின் நடு கல் மரபு குறித்து உரையாற்றினார்.

பாவலர் பரணர் ஐயா அவர்களுடைய பண்பு நலன்கள் குறித்தும் அவருடைய கொள்கை உறுதி குறித்தும் தமிழ்க் கலை இலக்கியப் பேரவையின் நடுவண் குழு உறுப்பினர் பாவலர் நா.ராசா ரகுநாதன், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாநகரச் செயலாளர் தோழர் வே.க.இலக்குவன், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு.தியாகராசன், தோழர் ப.தமிழ் முகில் ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினார்கள்.

பாவலர் பரணர் அவர்களின் தமிழ் தேசியக் கொள்கைகளையும் அவருடைய வாழ்வியல் சிறப்புகளையும் விவரித்து பாவலர் பரணரின் கொள்கையைப் பின்பற்றி இன்றைய இளைஞர்கள் அறிந்து நடக்க வேண்டிய தேவை குறித்து விளக்கி தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியின் நிறைவில் செல்வி சாலினி நன்றி கூறினார்.

கூட்ட நிகழ்விற்கு பாவலர் பரணர் அவர்களின் மனைவி அம்மா ஐந்தருவி அவர்களும் மற்றும் அவரது குடும்பத்தாரும் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

மேலும் இந்நிகழ்வில் தமிழ் அறிஞர்கள் ஐயா கேசவன் ஐயா சு.முருகானந்தம், தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தஞ்சை மாவட்ட செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.ராசேந்திரன், தஞ்சை மாநகர செயலாளர் தோழர் ராமு, பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் தென்னவன் ஆகியோர் நினைவேந்தல் நிகழ்விற்கு வந்து கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.