சீராத்தோப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூவர்ண உணவு வகைகள் காட்சி

0 695
Stalin trichy visit

75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு காவேரி மகளிர் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவிகளால் சீராத்தோப்பு ஊ.ஒ.தொ.பள்ளியில் பல்வேறு துறையினரால்( சத்தான உணவு வகைகள், தன் சுத்தம் பேணுதல், நற் பழக்கங்கள்) பற்றி மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மூவர்ண உணவு வகைகள் காட்சி படுத்தப்பட்டது.மாணவர்கள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.முதல் வகுப்பு மற்றும் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு இரத்த வகை கண்டறிந்தார்கள்.வரலாற்றுத்துறை மாணவர்களால் வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.பதில் அளித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.எம் பள்ளி மாணவர்களுக்கு தேசியக் கொடி அணிவித்து மகிழ்ச்சி அடைந்தனர்.ஆசிரியர்களுக்கு தேசியக் கொடி வழங்கினார்கள். அனைவருக்கும் மிட்டாய் வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.