“நம்ம ஊரு சூப்பரு” திட்டத்தில் பேருந்து நிறுத்தம் சுத்தம் செய்யும் பணி : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் , இன்று (20.8.22) முதல் வருகின்ற அக்டோபர் 1 ஆம் தேதி வரை சிறப்பு சுகாதார முகாமான “நம்ம ஊரு சூப்பரு” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மருங்காபுரி ஒன்றியம் தொட்டியபட்டி ஊராட்சியில் பேருந்து நிறுத்தம் சுத்தம் செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், தொடங்கி வைத்தார்.