இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகராட்சிக்கு கோரிக்கை
மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இயங்கும் ஆர்.வி.பி. மன்றத்தில் 23 வது வார்டு சி.பி.ஐ கிளை கூட்டம் நடைபெற்றது .இக்கூட்டத்திற்கு கிருஸ்துராஜ் தலைமை வகித்தார் .இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரசெயலாளர் ஜனசக்தி உசேன் மாநில மாநாட்டு தீர்மானங்கள் கூறித்து எடுத்துரைத்தார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய ஒன்றிய அரசை கண்டித்து ஆகஸ்ட் 30ல் நடைபெற உள்ள மறியல் போராட்டத்தில் கிளைத்தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளது என்று முடிவு செய்யபட்டது.சிலம்பகரதெருவில் உள்ள மின்கம்பங்களில் புதிய மின்விளக்கு அமைக்கவும், மதுரை சாலையில் உள்ள அரசு ஆண்கள்-பெண்கள் மேல்நிலை பள்ளிகள் முன் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.ஜீவா, சரவணன், சென்ரிங் செல்வம் , முருகன், ஏழுமலை ,தமிழராசி, அந்தோணி, லரன்ஸ்மைக்கில் , அருள்சத்திஷ் உட்பட கிளைத்தோழர்கள் கலந்து கொண்டனர்.