ராகுல் காந்தி உரை
இது சாதாரண தேர்தல் அல்ல.
இது முற்றிலும் மாறுபட்ட கடுமையான தேர்தல்.
இந்த தேர்தலில் நாம் ஒரு பக்கம், அதிமுக பாஜக கூட்டணி மற்றொரு பக்கம். பாஜக பொம்மை முதல்வரை அமர வைக்க முயற்சி செய்கிறது. அதிமுக அமைச்சர்கள் தங்களது ஊழல்களை மறைப்பதற்காக பிஜேபி இடம் அடி பணிந்து உள்ளனர்.
பிஜேபிக்கு தெரியும் முக.ஸ்டாலின் எந்த காலமும் அடிபணிய மாட்டார் என்று. தமிழ் தொன்மையான மொழி. அது மக்களின் ஆன்மா என்றால் மிகையாகாது. தமிழ் மக்கள் வீரத்தை குறைத்து மதிப்பிடாதீர்கள்.
அதிமுக அமைச்சர்கள் தங்கள் ஊழல் குற்றச்சாட்டை மறைப்பதற்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.
அமலாக்கத்துறை மூலம் அதிமுகவினர் மிரட்டப்படுகிறார்கள். பாஜகவுக்கு நன்கு தெரியும் ஸ்டாலினை மிரட்ட முடியாது என்று.
ஸ்டாலின் தனது கொள்கையை எந்த காரணத்திற்காகவும் சமரசம் செய்து கொள்ள மாட்டார் என பாஜக அறிந்து உள்ளது.