கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற ஆர்.சி. மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

0 302
Stalin trichy visit

கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

ஆர் சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடத்தப்பட்டது.
ஆறு, ஏழு,எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நூலகத்தின் பயன்கள் தலைப்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் எட்டாம் வகுப்பு பயிலக்கூடிய யுவன் சங்கர் ராஜா முதல் பரிசினையும், தருணேஸ்வரன் இரண்டாம் பரிசினையும், திப்பு சுல்தான் மூன்றாம் பரிசினையும் பெற்றார்கள். முகமது சரபத், அப்துல் ரஹீம் ஆறுதல் பரிசினை பெற்றனர்.
பள்ளி நூலகம் தலைப்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் பத்தாம் வகுப்பு மாணவர் முகமது ஆசிக் முதல் பரிசினையும், ஒன்பதாம் வகுப்பு மாணவர் பெஞ்சமின் இரண்டாம் பரிசினையும், பத்தாம் வகுப்பு மாணவர் கௌதம் சித்தார்த் மூன்றாம் பரிசினையும் பெற்றார். ஆனந்தகுமார், அப்துல் சத்தார் உள்ளிட்டோர் ஆறுதல் பரிசினை பெற்றனர்.
பள்ளி தாளாளர் தலைமை ஆசிரியர் அருட்தந்தை சின்னப்பன் தலைமையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறந்த கட்டுரை எழுதிய மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முன்னதாக அறிவியல் ஆசிரியர் லூயிஸ் வரவேற்க, நூலக ஆசிரியர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.