தேசியக்கல்லூரியில் மாணவர்கள் எக்ஸ்னோரா தொடக்க விழா

0 316
Stalin trichy visit

திருச்சி தேசியக்கல்லூரியில் 24-வது ஆண்டு மாணவர்கள் எக்ஸ்னோரா தொடக்க விழா நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. டாக்டர் பி.நைனார் சுமதி வரவேற்றார். அதனைத்தொடர்ந்து தேசியக்கல்லூரி துணை முதல்வர் டாக்டர் ஆர்.இளவரசு தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினரான எக்ஸ்னோராவின் நிறுவனர் மோகன் பேசுகையில், மாணவர்கள் தங்களது வீட்டில் இருந்து தொடங்கக்கூடிய தீமைகளில் இருந்து இயற்கையை ஆதரிக்கவும், பாதுகாக்கவும் கேட்டுக்கொண்டார். மேலும் சுற்றுச்சூழலுக்கான சேவை என்பது பொது சேவை அல்ல, அது சுய சேவையாகும் என்றும் குறிப்பிட்டார். நிறைவில் டாக்டர் எம்.என்.வி.பிரேயா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி தேசியக்கல்லூரியை சேர்ந்த எக்ஸ்னோராவின் பணியாளர் ஆலோசகர்களான டாக்டர் பி.நைனார் சுமதி, டாக்டர் எம்.என்.வி.பிரேயா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.