மினி மாரத்தான் போட்டி…
ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினம் மற்றும் போதை பொருள் விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் விதமாக திருச்சி அம்ரிதா வித்யாலயம் பள்ளியின் சார்பாக மினி மாரத்தான் போட்டி இன்று அரசு தலைமை மருத்துவமனையில் இருந்து பள்ளி வளாகம் வரை (4km) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காவல்துறை கூடுதல் ஆணையர் (DC) V.அன்பு போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு போட்டியை துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் வரவேற்று மாணவர்களை ஊக்கப்படுத்தினார். இப்போட்டியில் சுமார் 350 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இறுதியில் வெற்றி பெற்ற முதல் 20 மாணவர்களுக்கு அரசு தலைமை மருத்துவமனை காவல் ஆய்வாளர் அருள் ஜோதி பரிசுகளையும், சான்றிதழ்கள் வழங்கினார்.
