ரூ.3.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்- பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

0 289
Stalin trichy visit

முதல்வரின் உற்ற நண்பர், முன்னாள் கழக இளைஞர் அணி துணைச் செயலாளர்-முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பொய்யாமொழியின் 23’ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர்,  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக அன்பில் அறக்கட்டளையிலிருந்து ரூ.3.75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்நிகழ்வில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன் , மண்டல குழு தலைவர் மு.மதிவாணன் பகுதிகழகச் செயலாளர் ஒன்றிய கழகச் செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் கழக நிர்வாகிகள் , தி.மு.க தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.

Leave A Reply

Your email address will not be published.