திருச்சி பி.ஆர்.ஒ. மாற்றம் ஏன்? புதிய தகவல்கள்

0 738
Stalin trichy visit

திருச்சி பி.ஆர்.ஒ.வாக இருந்த ரவிச்சந்திரன் எதற்காக திடிரென பணியிடை மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் ஏ.பி.ஆர்.ஒ.வாக பணியாற்றியவர் ரவிச்சந்திரன். தற்போது ஆட்சி மாற்றம் நிகழந்துள்ள நிலையில் பதவி உயர்வு காரணமாக பி.ஆர்.ஒ.வாக ஆனார். திருச்சி மாவட்டமானது ஏ.டி. இயக்குநர் அந்தஸ்துள்ளது. திருச்சி பி.ஆர்.ஒ. ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்ட நிலையில்மூத்த பி.ஆர்.ஓ.க்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சீனியராக இருக்கும் ஒருவரை பி.ஆர்.ஒ.வாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து திருச்சி பி.ஆர்.ஒ.வாக இருந்த ரவிச்சந்திரனை போக்குவரத்துத்துறைக்கு மாற்றம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். விரைவில் திருச்சி மாவட்டத்திற்கு புதிய பி.ஆர்.ஒ. நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Leave A Reply

Your email address will not be published.