மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

0 321
Stalin trichy visit

மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள்

திருச்சி இரட்டைவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள அமிர்த வித்யாலயம் பள்ளியில் இன்று மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

முதல்நாள் போட்டியாக  கூடைப்பந்தாட்டப் போட்டியும், கேரம் விளையாட்டுப் போட்டியும்  இன்று காலை இனிதே துவங்கியது.

கூடைப்பந்தாட்டப் போட்டியில் 17 அணிகளும்,கேரம் விளையாட்டுப் போட்டியில் 180 மாணவர்களும் கலந்து கொண்டனர்.

மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தீபன் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர்  திரு . டாக்டர். குணசேகரன் அவர்கள் கலந்து கொண்டு , வெற்றி பெற்ற மாணவ,மாணவர்களுக்குப் பரிசுகளையும்,சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினாா்.

பள்ளி முதல்வர் திருமதி. உஷா ராகவன் அவர்கள் வரவேற்புரை வழங்கி கெளரவித்தாா்.உடற்கல்வி ஆசிரியர் திரு. முருகபூபதி அவர்கள் நன்றியுரை வழங்கினாா்.தேசிய கீதத்துடன்  இன்றைய நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

விளையாட்டு விழாவின் தொடர்ச்சியாக
நாளை சதுரங்கப்போட்டி பள்ளிவளாகத்தில் நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.