போதைப் பொருட்களை தடுக்கக் கோரி இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

0 293
Stalin trichy visit

போதைப்பொருட்களை தடுக்க வேண்டி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருவெறும்பூர் செப் 10
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மாலை திருவெறும்பூர் கடைவீதியில்
கட்சியின் தாலுக்காக்குழு உறுப்பினர் வாழவந்தான் கோட்டை எஸ்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் த.இந்திரஜித் கண்டன உரையாற்றி பேசுகையில்
போதை பொருட்கள் தடுக்கப்பட வேண்டும்.
இளைஞர்கள், மாணவர்கள் தவறான வழியில் கொண்டு செல்வது தடுக்கப்பட வேண்டும்.
அரசின் பொது இடங்களை பாதுகாக்க அரசு அதிகாரிகள் நேர்மையுடன் செயல்பட்டு ஆக்கிரமிப்பு செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களை அச்சுறுத்தும் சமூக விரோதிகளை கட்டுப்படுத்த வேண்டும்.
தினம் தினம் ஏற்படும் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க துவாக்குடி முதல் பால் பண்ணை வரையிலான சர்வீஸ் சாலையை விரைவாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது மக்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் தொண்டமான் பட்டி டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்.
பெல் நிறுவனம் போன்ற பொதுத்துறைகளை தனியார் மயமாக்கும் முயற்சிகளை கைவிட்டு அவைகளை பாதுகாக்க வேண்டும்.
கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் விவசாயிகளுக்கு எதிராகவும் செயல்படும் மத்திய அரசு மக்கள் விரோதக் கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில்
புறநகர் மாவட்டச் செயலாளர்
செ.ராஜ்குமார்
முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.செல்வராஜ்
மாவட்ட பொருளாளர் உ.பக்கிரிசாமி
தாலுகாக்குழு உறுப்பினர்
கே.பழனிச்சாமி
அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகி பழனிச்சாமி
மூத்த தலைவர் முன்னாள் நிர்வாகி
ஜி.ராமன் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில்
ஊராட்சி மன்றத்தலைவர் டாக்டர் எஸ்.ரம்யா
ஒன்றியக் கவுன்சிலர் கே.இளையராணி
இளைஞர் பெருமன்ற ஒன்றியச் செயலாளர்
எம்..தமிழரசன்,
ஆட்டோ சங்க ஏஜடியுசி செயலாளர்
எஸ்.காளீஸ்வரன்
கட்சியின் தாலுக்காக்குழு உறுப்பினர்கள்
ஜே.மைக்கேல்,
எப்.ஜார்ஜ் நிக்கோலஸ்
எம்.ஏசுதாஸ்
எம்.ஆரோக்கியதாஸ்
எஸ்.வின்சென்ட்
ஆர்.டிக்சன்ராஜ்
எஸ்.கீர்த்திவாசன்
ஜி.ஆர்.பிரகாஷ்
எம்.முகமதுஅலி
பெல்.கலியபெருமாள்
பெல்.முருகன்
உ.சுடலைமணி
ஜி.அமிர்தலிங்கம்
த.சுப்ரமணியன்
போக்குவரத்துக் கழக நிர்வாகி
மாரியப்பன்
எஸ்.சத்தியசீலா
ஜி.சரண்யா
கே.போஸ்
பூபாலன்
பாலகிருஷ்ணன்
சேகர்
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.