ABVP நகர பயிற்சி முகாம்…
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் ( ABVP ) தேசிய மாணவர் அமைப்பு லால்குடி நகர கிளை சார்பாக லால்குடி தம்பாச்சியா திருமண மண்டபத்தில் ABVP நகர பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி முகாமில் சுமார் 30- க்கும் மேற்பட்ட மாணவத் தலைவர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி முகாமில் மாணவர் ராஜ் குமார் வரவேற்புரை ஆற்றினார். ABVP அறிமுகம் மற்றும் சாதனை குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ. அஸ்வின் உரையாற்றினார். தேசிய சிந்தனையில் மாணவர்களின் பங்கு என்பது குறித்து உரை இருந்தது. பயிற்சி முகாம் நிறைவு நிகழ்ச்சியாக இந்த ஆண்டிற்கான லால்குடி நகர பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். ABVP லால்குடி நகர ஒருங்கிணைப்பாளராக ஸ்ரீ. சந்தோஷ் மற்றும் நகர செயலாளராக ஸ்ரீ. மகேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
