ஒருங்கிணைந்த பண்ணையம் தொடக்கவிழா
திருச்சி கலையரங்கில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளில் ஆயிரம் ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணையத்தினை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்து, இத்திட்டத்தின் இலச்சினையினை அறிமுகம் செய்து மாதிரிப் பண்ணை வடிவமைப்பினையும் மற்றும் பயனாளிகளுக்கு பல்வகை செடி நாற்றாங்கல், மரக்கன்றுகளையும், வளர்ப்புக் காளான்களையும், 59 மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு ரூ.39 இலட்சத்திற்கான வங்கி கடனுதவிகளையும் வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, மகளிர் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரணி, மாவட்ட ஊராட்சித் தலைவர் இராஜேந்திரன், முக்கிய பிரமுகர் வைரமணி, மணிகண்டம் ஒன்றியக் குழுத் தலைவர் கமலம்கருப்பையா, நவலூர் குட்டப்பட்டு ஊராட்சித் தலைவர் ஜார்ஜ் பெர்னான்ட்ஸ் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் கலந்து கொண்டனர்.