பாம்பு கடித்து பெண் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே மாங்கனாபட்டியைச் சேர்ந்தவர் சின்னப் பொண்ணு (வயது 37). இவர் நேற்று இரவு வழக்கம்போல் வீட்டினுள் கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார்.

நள்ளிரவில் வீட்டினுள் புகுந்த பாம்பு ஒன்று கட்டிலில் படுத்திருந்த சின்னப்பொண்ணுவை கையில் தீண்டியுள்ளது. உடனடியாக அவரை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அதிகாலை சின்னப் பொண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.