தந்தை பெரியார் 144வது பிறந்தநாள் : அமைச்சர் அன்பில் மகேஸ் அறிக்கை
திருச்சி தெற்கு மாவட்டத்தில், தந்தை பெரியார் 144வது பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டப்படுகின்றது !
மாவட்ட கழக பொறுப்பாளரும், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை !
தந்தை பெரியாரின் ஒவ்வொரு பிறந்த நாளும் “சமூக நீதி” நாளாக கடைப்பிடிக்கவேண்டும் என்று கழக தலைவர் அவர்கள் அறிவித்ததற்கிணங்க மறைந்த தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 17/09/022 சனிக்கிழமை காலை 8 மணி அளவில் திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில், தந்தை பெரியாரின் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளோம்.
இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், கழகச் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.