வையம்பட்டி காவல்நிலைய தகவல் பலகையில் புதுப்பிக்கப்படாத காவல்துறை அதிகாரிகள் பெயர்கள் : சமூக ஆர்வலர்கள் கேள்வி

0 127
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 23 வையம்பட்டி காவல் நிலைய வளாகத்தில்  திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் மாற்றம் செய்யப்பட்டும் காவல் நிலைய தகவல் பலகையில் பெயர் மாற்றாதது ஏன்? – சமூக ஆர்வலர்கள் கேள்வி

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மணப்பாறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ள நிலையில், வையம்பட்டி காவல் நிலைய வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள தகவல் பலகையில் இன்னும் பழைய அதிகாரிகளின் பெயர்களே இடம்பெற்றிருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.

காவல் நிலையத்திற்கு தினசரி பல்வேறு தேவைகளுக்காக வரும் பொதுமக்கள், புகார்தாரர்கள் மற்றும் வழக்கு தொடர்பான நபர்கள் அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு விவரங்களை தகவல் பலகையின் மூலம் அறிந்து கொள்வது வழக்கம். ஆனால் அதிகாரிகள் மாற்றப்பட்டு பல நாட்கள் கடந்தும் தகவல் பலகையில் புதிய அதிகாரிகளின் பெயர்கள் புதுப்பிக்கப்படாததால் குழப்பமான சூழல் நிலவி வருவதாக கூறப்படுகிறது.

அரசுத் துறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களுக்கு துல்லியமான தகவல் வழங்கும் நோக்கில் தகவல் பலகைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை உடனுக்குடன் புதுப்பிக்க வேண்டியது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் பொறுப்பு என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

புதிய அதிகாரிகள் பொறுப்பேற்ற பிறகும் பழைய பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பது அலட்சியத்தை காட்டுகிறது. இதனால் பொதுமக்கள் தவறான தகவலைப் பெறும் நிலை உருவாகிறது. எனவே காவல் துறை நிர்வாகம் உடனடியாக தகவல் பலகையை புதுப்பித்து புதிய அதிகாரிகளின் பெயர் மற்றும் விவரங்களை வெளியிட வேண்டும்” என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தகவல் பலகையை புதுப்பிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.