திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்..

0 274
Stalin trichy visit

திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட திருப்பைஞ்சீலியில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை துவங்கி நடைபெற்றது.

இந்த பொதுக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி,முன்னாள் அமைச்சர் வளர்மதி,முன்னாள் எம்.எல்.ஏக்கள் பரமேஸ்வரி, பிரின்ஸ் தங்கவேல் உள்பட பல முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்பு கூட்டத்திற்காக போடப்பட்டிருந்த மேடையில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, இதனால் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் ஆர்வமுடன் கூடியதால் அப்பகுதி முழுவதும் கலைக்கட்டியது.

பின்னர் பொதுக்கூட்டம் தொடங்கி கட்சி நிர்வாகிகள் பேச தொடங்கியபோது பொதுமக்கள் மக்கள் அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்றனர்.

அப்போது தேனீர் இடைவேளைபோல் மேடையில் அமர்ந்திருந்த கட்சி நிர்வாகிகளுக்கு சூடான டீ வழங்கப்பட்டது. எதற்கும் சளைக்காத கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து சிறப்புரையாற்றினர்.

இறுதியாக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி பொதுமக்கள் இல்லாத கூட்டத்தில் பேசுகிரோமே என்று வேறு வழியின்றி தனது உரையை பேசி முடித்தார் – அனுமதி வாங்காத ஆடல் பாடலுடன் தொடங்கி கலைக்கட்டிய பொதுக்கூட்டம் இறுதியில் கலை இழந்த சம்பவம் அதிமுக கட்சி நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

சமீப நாட்களாக அதிமுக சார்பில் நடத்தப்பட்டு வரும்போது கூட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற இடங்களில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவின் காரணமாகவும் கருத்து வேறுபாடுகள் காரணமாகவும் தொண்டர்கள் மத்தியில் ஒருவித அதிருப்தி இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.