ஸ்ரீரங்கத்தில் தீ விபத்து

0 265
Stalin trichy visit

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சுற்றி இருக்கும் மேலச்சித்திரை விதியின் பின்புறம் மேல அடையவலஜான் தெருவில் உள்ள ஒரு தனி வீட்டில் இன்று மாலை சுமார் 4.30 மணியளவில் வீட்டின் மேற்குறை தீப்பற்றி ஏறிந்தது. இதனால் ஸ்ரீரங்கம் மேல சித்திரை விதி முழுவதும் கரும்புகையாக காணப்பட்டது.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு சுமார் 50 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளன

மளமள வென்று தீ பற்றியதால் வீட்டில் இருந்த அனேக பொருட்கள் தீயில் ஏறிந்தது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்

Leave A Reply

Your email address will not be published.