மாவட்ட தடகள போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு

0 295
Stalin trichy visit

திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள சங்கம்

திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள போட்டிகள் 2022, ஸ்டேட் பேங்க் (லேட்] S.மோகன் நினைவு சுழற்கோப்பை 2022
இணைந்து வழங்குபவர்கள் நியூரோ ஒன் & ஆப்பின் மில்லட் ரெஸ்டாரண்ட் நடத்தும்
இளையோருக்கான திருச்சி மாவட்ட தடகள போட்டிகள் வரும் 19.09.2022 மற்றும் 20.09.2022 ஆகிய இரண்டு நாட்கள் திருச்சிராப்பள்ளி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு தலைமையில், தடகள பொருளாளர் ச.ரவிசங்கர், மக்கள் தொடர்பு தண்ணீர் கே.சி. நீலமேகம், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பாபு, துணை செயலாளர் ராமசந்திரன், துணைத் தலைவர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை நடந்தது.

திருச்சி மாவட்ட தடகள தொகுப்பாளர் முனைவர் ஹரிஹரராமசந்திரன் வரவேற்றார் .போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் முதலாக முதல் முன்று நபர்களுக்கு அனைத்து பிரிவினர்களுக்கும் 300, 200,100 என ஊக்கத்தொகையுடன் , பதக்கம் மற்றும் சான்றிதழ், பரிசளிப்பு விழா வில் கொடுக்கப்பட்டது.வெற்றி பெற்றவருக்கு
திரு. ரத்னகுமார் மாதுர் அவர்கள்
Joint Commissioner of Custom, GST & Central Excise Dept. Trichy

திரு.M.ஆனந்தன் M.Sc,B.Ed.,அவர்கள்
Commandant of Police, TSP 18N, Trichy.

திரு.வீரசக்தி அவர்கள்
ஆப்பிள் மில்லட் ரெஸ்ட்ராண்ட
ஆகியோர்
வெற்றி பெற்றவருக்கு பதக்கம், சான்றிதழ், மற்றும் கோப்பை வழங்கி வாழ்த்தி சிறப்புரையாற்றினார்கள்.

பெண்கள் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் முசிறி அமலா பெண்கள் மேலனிலைப் பள்ளி
தங்கம் -6, வெள்ளி -7, வெண்கலம் -7

ஆண்கள் பிரிவில் திருச்சி விளையாட்டு மாவட்ட மேம்பாட்டு ஆணையம்,
தங்கம் -15,வெள்ளி -15,வெண்கலம் -7

முடிவில் தடகள சங்க இணைச் செயலாளர் எம்.ரமேஷ் நன்றி கூறினார்.

இப்போட்டியில் தடகள நிர்வாகிகள் ரமேஷ், சந்திரசேகர், மனோகரன் , ஐபுருல்லாகான், லாசர், மதி, நடராசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், 2000 மேற்பட்ட தடகள வீரர்கள், கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்

இப்போட்டியில் தகுதிப் பெறும் வீரர், வீராங்கனைகள் திருவண்ணாமலையில் 13, 14, 15 மற்றும் 16.10.22 தேதியில் நடைபெறும் மாநில போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் தகுதியின் அடிப்படையில் தேசிய போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவர்.

Leave A Reply

Your email address will not be published.