மணப்பாறையில் தீண்டாமை கொடுமை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

0 367
Stalin trichy visit

மணப்பாறை, செப். 23  மணப்பா றையை அடுத்த தெற்கு அம்மா பட்டியில் சாதிய தீண்டாமை நில வுவதாக எழுந்த புகாரின்பேரில், மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்கு மார், ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர், மணப்பாறை வருவாய் வட்டாட் சியர் ஆகியோர் புதன்கிழமை மாலை அங்கு விசாரணை மேற் கொண்டனர். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் தெற்கு அம்மாபட்டியில் சாதிய தீண் டாமை நிலவுவதாகவும், பட்டி யலினச் சமுதாயத்தை சேர்ந்த வர்களுக்கு கடைகளில் கையைக் குவிக்கச் சொல்லி தண்ணீர் ஊற் றும் கொடுமை இன்னமும் நடக் கிறது எனவும் வெளியான செய் திகளைத் தொடர்ந்து இந்த விசா ரணை நடைபெற்றது. – அப்போது, – – – தீண்டாமைக் கொடுமை ஏதும் நடக்கிறதா என அங்குள்ள மக்களிடம் ஆட்சியர் கேட்டறிந்தார். பின்னர் அந்தக் கிராமத்தில் 143 குடும்பங்களாக வசிக்கும் குறிப்பிட்ட சமூகத்தி னரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தீண்டாமை செயல்கள் ஏதும் நடைபெறவில்லை எனத் தெரியவந்ததாக ஆட்சியர் தெரி வித்தார். விசாரணையின்போது, ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் வைத் தியநாதன், மணப்பாறை வரு வாய் வட்டாட்சியர் கீதாராணி ஆகியோர் உடனிருந்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.