அரசு, அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் களப்பயணம்
திருச்சி தேசியக் கல்லூரி விலங்கியல் துறை முதுகலை ஆய்வு மாணவர்கள் பேராசிரியர்கள் கல்லூரி அழைப்பின் பேரில் அந்த நல்லூர் ஒன்றிய அரசு, உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளின் ஆசிரியர்கள் மாணவர்கள் களப்பயணமாக 100 பேர், சூழலியல் கருத்தரங்கில் கலந்து கொண்டு கல்லூரியின் அறிவியல் ஆய்வகங்களை பார்வையிட்டு மகிழ்ந்தனர். முன்னாள் மாவட்ட வனப்பாதுகாவலர் திரு.சுந்தரராஜ் அவர்கள் உயிரின பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்க உரை ஆற்றினார். அவரின் கேள்விகளுக்கு பதில் கூறிய மாணவர்களுக்கு நூல்களை பரிசாக வழங்கி பாராட்டினார்.
