இடைவெளி விட்டு மீண்டும் தலை தூக்கும் திருட்டு, கொள்ளை குற்றங்கள்.
நேற்று இரவு (23-09-22) திருச்சி-காட்டூர் பகுதியில் (தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில்) அமைந்துள்ள B.G. நாயுடு ஸ்வீட்ஸ் மற்றும் துளசி பார்மஸி ஆகிய கடைகளின் பூட்டுகளை உடைத்து பணம் மற்றும் மின்சாதனப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட துணிகர சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
புகாரின் அடிப்படையில் இப்போது காவல்துறையின் விசாரணை நடைபெறுகிறது.
திருவெறும்பூர் , காட்டூர் பகுதிகளைச் சார்ந்த குடியிருப்பு வாசிகள், தங்களது உடைமைகளைக் காத்து கொள்ள, கவனத்துடனும் – உரிய பாதுகாப்பு வழிமுறைகளுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள், வைரம், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களை வைத்து விட்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியூர் செல்ல வேண்டாம்.
இயன்றவரை வீட்டைச் சுற்றிலும் வெளிச்சம் தரும் விளக்குகளை இரவு முழுவதும் எரிய விடலாம்.
சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி, பாதுகாப்பை மேலும் அதிகமாக்கலாம்.
அண்டை வீட்டார் மற்றும் குடியிருப்பு வாசிகளுடன் இணக்கமாக இருந்து, பாதுகாப்பிற்கு ஒற்றுமையான கூட்டு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளவும்.