நெட்டவேம்பட்டி அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை-சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆடியோ..

0 494
Stalin trichy visit

திருச்சி துறையூரை அடுத்த நெட்டவேம்பட்டி அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட விவகாரம் – திட்டமிட்டு தன் மீது புகார் அளித்து போக்சோ வழக்கில் சேர்த்தார் தலைமை ஆசிரியர் – சமூக வலைதளங்களில் வைரலாகும் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியையின் ஆடியோ ….

திருச்சி துறையூரை அடுத்த நெட்டவேலம்பட்டி அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

நெட்டவேலம்பட்டியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றிய லில்லி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் – லில்லியின் மரணத்திற்கு நெட்டவேலம்பட்டி தலைமையாசிரியர் ராஜசேகர் மற்றும் அங்கு பணியாற்றும் லேப் அசிஸ்டன்ட் சசிகலா மட்டுமே காரணம் என்று மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் லில்லியின் கணவர் புகார் அளித்திருந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியை குறித்து லில்லி கேள்வி எழுப்பியதற்காக :

தலைமை ஆசிரியர் ராஜசேகர் திட்டமிட்டு தமிழ் ஆசிரியர் பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதற்கு லில்லி துணை போனதாக கூறி போக்சோ வழக்கில் சேர்க்கும் அளவில் பொய்யான புகாரை கொடுத்தாகவும்,
நியாயமாக நடந்து கொண்ட லில்லியின் மீது போக்சோ வழக்கில் சேர்த்ததில் இருந்தே தொடர்ந்து மன அழுத்தத்தில் இருந்த லில்லி தற்கொலை செய்து கொண்டதாக மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் லில்லியின் கணவர் புகார் அளித்திருந்தார்.

இதற்கிடையில் பல்வேறு சர்ச்சைக்கு உள்ளான தலைமை ஆசிரியரை இந்த பள்ளியில் இருந்து மாற்ற வேண்டும் என்று கடந்த வாரம் 50-க்கும் அதிகமான மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்று திரண்டு தங்களது குழந்தைகளின் மாற்று சான்றிதழ் வேண்டும் என்று பள்ளிக்கு முன்பாக போராட்டம் நடத்தினர் – இதற்கிடையில் நடந்த விபரங்கள் குறித்து லில்லி பேசிய ஆடியோ தற்போது வெளியாகி வருகிறது :

தற்கொலை செய்து கொண்ட லில்லி வழக்கறிஞரிடம் விபரங்களை கூறிய ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது

ஆசிரியை லில்லி கூறிய விபரங்கள் :

மாணவர்கள் நலன் மீது அக்கறை செலுத்தி பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியை குறித்து கேள்வி கேட்டதற்காக தமிழ் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதற்கு நான் உடந்தையாக இருந்ததாகவும் என் பக்கம் பொய் புகாரை திருப்பி விட்டார் தலைமை ஆசிரியர் ராஜசேகர்.

75% கண் பார்வை குறைபாடுடைய தமிழ் ஆசிரியர் மானவியிடம், அதுவும் ஞாயிற்று கிழமையில் பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள்.

போக்சோ வழக்கில் தன்னை சேர்த்து திட்டமிட்டு பழி வாங்கிய தலைமை ஆசிரியர் குறித்து லில்லி கூறிய விபரங்கள்.

Leave A Reply

Your email address will not be published.