கைலாசாவிலிருந்து பா.ஜ.க.பிரமுகருக்கு விருது கொடுத்த நித்தி…

0 244
Stalin trichy visit

திருச்சி சிவாவின் மகனும் பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளராக உள்ள திருச்சி சூர்யா சிவாவுக்கு தர்மரட்சகர் விருது கொடுத்துள்ளதாக நித்தியானந்தா அறிவிப்பு –
அதற்கு நன்றி கூறும் வீடியோவை தனது டிவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார் சூர்யா சிவா.

நேற்று விஜயதசமி நிகழ்ச்சியில் இவருக்கு தர்மரட்சகர் விருது வழங்கப்பட்டது – இந்து மதத்தின் புகழை ஊடகங்களில் தொடந்து பரப்பி வருவதால் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக நித்யானந்தா அறிவித்துள்ளார்.

யார் கண்ணுக்கு தெரியாத கைலாசா தீவில் தான் இருப்பதாக சொல்லி நித்தியானந்தா வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அப்படி ஒரு இடத்திலிருந்து வழங்கப்பட்ட விருதினை பா.ஜ.க. பிரமுகர் சூர்யாசிவா எப்படி பெறுமுடியும், அதற்கு நன்றி தெரிவித்து சூர்யாசிவா பதிவு வெளியிட்டுள்ளார். இதை பார்க்கும் போது என்னடா நடக்குது இங்கே? என்று நினைக்கக் தோன்றுகிறது…

Leave A Reply

Your email address will not be published.