முன்களப்பணியாளர்களுக்கு சுகாதாரப் பணிப் பொருட்கள் வழங்கல்

0 262
Stalin trichy visit

ரோட்டரி கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி சக்தியின்  வழியாக 150 முன் கள நலப் பணியாளர்களுக்கு தேவையான ரூ.2.25 லட்சம் பெருமானமுள்ள சுகாதாரப் பணிப் பொருட்கள் வழங்கப் பட்டது. இந்த விழாவிற்கு மாநகராட்சியின் சுகாதார அலுவலர் (பொறுப்பு) Dr. ஷர்மிளி பிரிஸ்ஸில்லா அவர்கள் தலைமை தாங்கினார்கள். கொரோனா தாக்குதலின் போது துணிவோடு நின்று பொது நலம் காத்த தன்னலமற்ற மருத்துவர்களையும், நலப் பணியாளர்களையும் கௌரவிக்க இந்த விழா ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சுகாதாரப் பணிப் பொருட்களை நியூ லைஃப் தொண்டு நிறுவனம் வழங்கியது. இத்திட்டத்தின் மூலம் இருதயபுரம், தென்னூர், பீம நகர், உய்யக்கொண்டான் திருமலை, EB ரோடு, பீரங்கிக்குளம் மற்றும் சோமரசம்பேட்டை பகுதிகளில் உள்ள 150 பணியாளர்கள் பயன் பெற்றார்கள். விழாவில் ரோட்டரி கிளப் தலைவி Rtn. பியாட்ரிஸ் வனஜா வரவேற்புரை வழங்கினார். செயலர் Rtn. சசிகலா செல்வராஜ் நன்றியுரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை பொருளாளர் Rtn. ஷோஷன் இணைந்து செய்திருந்தார். விழாவிற்கு சக்தி கிளப்பின் உறுப்பினர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.