திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை : கணக்கில் வராத ரூ.52 ஆயிரம் பறிமுதல்

0 162
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 5  திருச்சி திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 52 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை துறையூர் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலகம் ஆகிய இரண்டு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் திருவெறும்பூர் சார் பதிவாளர் அலுவலகத்தை பொருத்தவரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சோதனை நடைபெற்றது அந்த சோதனையில் கணக்கில் வராத 52 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்த பணம் லஞ்சமாக பெறப்பட்டதா அல்லது வேறு காரணங்களுக்காக பெறப்பட்டதா அதை வாங்கியவர்கள் யார் என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக முழுவதும் நடைபெறும் லஞ்ச ஒழிப்புத் துறையின் சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.