குற்றங்களை தடுக்க  திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் நடைரோந்து தொடக்கம்

0 15
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 5  தமிழ்நாட்டில் குற்றங்களை தடுக்கும் வகையில் காவல்துறை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காவல்துறையினரை நடை ரோந்து மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில்  நேற்று  நடை ரோந்து நடைபெற்றது.  நடை ரோந்தில் திருச்சி மாவட்ட எஸ் பி டோங்கிரி பிரவீன் உமேஷ் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் பனாவத் அரவிந்த் (Banavath Aravind) IPS காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் காட்டூர் மஞ்சள் திடல் பாலம் அருகே தொடங்கிய பேரணி திருவரம்பூர் அருகே நிறைவடைந்தது.

தினமும் ஒரு மணி நேரம் நடை திறந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்துவது, வழிப்பறி சம்பவங்களை கட்டுப்படுத்துவது பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக நடை ரோந்து நடத்தப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.