காவிரி பாலம் வழியாக செல்வோர் கவனத்திற்கு
திருச்சி மாநகர சாலை பயனீட்டாளர்களின் மேலான கவனத்திற்கு
திருச்சி-ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரிப்பாலத்தில் தற்போது சீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மாற்றுப்பாதையாக பழைய காவிரி பாலம் பைபாஸ் வழியாக போக்குவத்து நடை பெற்று வருகிறது.
மேற்கண்ட பைபாஸ் பாலத்தில் விபத்து ஏற்படும்போதோ அல்லது வாகனம் பழுதாகி நிற்கும் போதோ பெருமளவு போக்குவரத்து நெரிசலை சாலை பயனீட்டாளர்கள் தினசரி சந்திக்க வேண்டி உள்ளது .
இதைத் தவிர்க்க காவேரி பாலம் சீரமைப்பு பணிகள் நிறைவு பெறும் வரையில் ஒருசில மாதங்களுக்கு நான்கு சக்கர வாகனத்தை பயன்படுத்துவோரில் வாய்ப்புள்ளோர் (பணி முடியும் வரை )இருசக்கர வாகனத்தை பயன்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க , மாநகர பகுதிகளில் துறை சார்ந்த நிர்வாகங்கள் சார்பாக ஆங்காங்கே வாகன நிறுத்தும் இடங்கள் கண்டறியப்பட்டு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறிய வருகிறோம்.
ஆகையாள் சாலை பயனீட்டாளர்கள் மேற்கண்ட முறைகளை, வசதிகளை பயன்படுத்தியும், போக்குவரத்து விதிகளை கடை பிடித்தும் மாநகர நிர்வாகத்திற்க்கும், மாநகர காவல்துறைக்கும் ஒத்துழைப்பு நல்கி விபத்தில்லா தீபாவளி திருநாளை குடும்பத்தார்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டுகிறோம் என்று திருச்சி மாவட்ட சாலை பயனீட்டாளர் நல அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.