தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றிய கூட்டம்

0 393
Stalin trichy visit

தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றிய கூட்டம், திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய NGO கூட்ட அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் எழுச்சி நாயகன் திரு. இரா. சண்முகராஜன்  வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியத்தின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் திரு.ஆனந்த் அவர்களின் தலைமையில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தை சேர்ந்த திருச்சி மாவட்ட தலைவர் *திரு, கலியமூர்த்தி அவர்களும், மாவட்ட செயலாளர் சதீஷ் பாபு அவர்களும், மாவட்ட பொருளாளர் சந்தோஷ் குமார் அவர்களும், தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியத்தின் மாநில தலைவர் திரு. கே.ராஜா அவர்களும், மாநில பொதுச் செயலாளர் திரு.பொன்.ஜெயக்குமார் அவர்களும், மாநில இணைச்செயலாளர் திரு. சுப்பிரமணியம் அவர்களும், மாவட்ட செயலாளர் வேலாயி அவர்களும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அமுதா அவர்களும் கலந்து கொண்டு பேசினார்கள். அக்கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்க கோட்டத்தில் உள்ள அனைத்து சத்துணவு அமைப்பாளர்கள் சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் புதிய உறுப்பினர்களாக தங்களை தமிழ்நாடு சத்துணவு பணியாளர்கள் ஒன்றியத்தில் இணைத்துக் கொண்டனர். ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு புதிய தலைவராக விஜயலட்சுமி அவர்களும் செயலாளராக பாண்டியம்மாள் அவர்கள் பொருளாளராக மகேஸ்வரி ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இறுதியாக ஸ்ரீரங்கம் கோட்டத் தலைவர் விஜயலட்சுமி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.