வெள்ளநீரை சேமிக்கும் திட்டத்தை திமுக அரசு மேற்கொள்ளும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி

0 258
Stalin trichy visit

அதிமுக ஆட்சியில் ஒரு தற்காலிக பொதுப்பணித்துறை பணியாளர்களை கூட நிரந்தரம் செய்யவில்லை – திமுக ஆட்சியில் இந்த நிலையை மாற்றி நிரந்தரம் செய்வோம் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி….

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முக்கொம்பு மேலணையினையில் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் – இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்,பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் :தாமிரபரணி,காவிரி ஆறுகளில் பெருக்கெடுக்கும் நீர் வீணாக கடலில் கலக்கிறது.வளர்ந்து வரும் விஞ்ஞானத்தில் வெள்ள நீர் சேமிப்பு சாத்தியமாகும் – வீணாகும் நீரை சேமித்து வைக்கும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொள்ளும். மேட்டூர் சரபங்கா இணைப்பு பணிகள் மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் ஒரு துளி நீரை கூட சேமிக்கப்படவில்லை.

ஏரிகளை வைத்து சீரமைத்து இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது – தெலுங்கானா அரசு வெள்ள நீரை சேமித்து வைக்கிறது அது போல திட்டங்கள் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படுமா என்கிற கேள்விக்கு ?

இறந்தவர்களுக்கும் உயிரூட்டும் வகையில் விஞ்ஞானம் வளர்ச்சி பெற்று உள்ளது – எனவே வெள்ளநீரை சேமிக்கும் திட்டம் கண்டிப்பாக சாத்தியமானது தான்.

தமிழகத்தில் அனைத்து ஏரி குளங்களும் தனது முழுக்க கொள்ளளவை எட்டி உள்ளது.

காவிரி கோதாவரி திட்டம் தமிழகத்தில் மட்டுமல்ல மற்ற மாநிலங்களிலும் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.