பைக்கில் சென்ற இளைஞர் சாலை தடுப்பு கட்டையில் மோதி பலி

0 321
Stalin trichy visit

புள்ளம்பாடியில் சாலை விபத்தில் வாலிபர் பலி.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி உள்ள திருச்சி அரியலூர் அணுகு சாலையில் மோட்டார் பைக்கில் சென்ற வாலிபர் தடுப்பு கட்டையில் மோதி படுகாயம் அடைந்தவர் பலியானார்.

லால்குடி அருகே இ. வெள்ளனூர் இடக்கிமங்கலம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கல்யாணகுமார். இவரது மகன் 22 வயதான சரண். இவர் திருச்சி அரியலூர் சாலையில் தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது புள்ளம்பாடி அணுகு சாலையில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் உள்ள தடுப்பு கட்டையில் எதிர்பாராதமாக மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக பலியானார்.இது குறித்து தகவலறிந்த கல்லக்குடி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.