தந்தை திட்டியதால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

0 296
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மணக்காலில் தந்தை திட்டியதால் மனம் உடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மணக்கால் பழைய தெருவை சேர்ந்தவர் மது இவருடைய மகன் 24 வயதான நித்திஷ்.இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மது போதையில் வீட்டிற்கு வந்த நித்திசை தந்தை கண்டித்துள்ளார். இதனால் மணமுடைந்த நித்திஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த லால்குடி போலீசார் உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் தற்கொலை செய்து கொண்டது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.