திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வலையூர் கிராமத்தில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மண ணச்சநல்லூர் அருகே வலையூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் 32 வயதான லோகநாதன்.இவருடைய மனைவி 22 வயதான நந்தினி் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு குழந்தை இல்லை. திருமணத்திற்கு பிறகு லோகநாதன் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வயிற்று வலிக்காக அவர் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தொடர் வயிற்று வலியால் அவதி அடைந்த லோகநாதன் மனம் உடைந்து விஷமறிந்தி மயங்கி கிடந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என கூறினார். இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.