மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

0 244
Stalin trichy visit

திருச்சி, அக். 19 திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் பெரியார் மருந்தியல் கல்லூரி இணைந்து நடத்தும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதமானது மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கருதி பிங் அக்டோபர் மாதம் என அறிவித்துள்ளதால் உலக நாடுகள் அனைத்தும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் மற்றொரு பகுதியாக திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியுடன் இணைந்து மாணவர்களின் புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி இன்று காலை (19.10.2022) 9மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலையில் துவங்கிது. விழிப்புணர்பு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் மாவட்ட கூடுதல் நடுவர் இரா.அபிராமி தொடங்கி வைத்தார். பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை கலந்து கொண்டார். பேரணியானது ஜென்னிஸ் ஹோட்டல் வழியாக திருச்சி தொடர் வண்டி நிலைய ரவுண்டனா, பெரிய மிளகு பாறை வழியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.