கொள்ளிடத்தில் அதிகரிக்கும் வெள்ளம்: முனீஸ்வரன் கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது

0 309
Stalin trichy visit

திருச்சி, அக்.19 கொள்ளிடம் ஆற்றில் தொடர்ந்து பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தால் – செக் போஸ்ட் அழகிரிபுரம் முனீஸ்வரன் கோவில் சுற்றுச்சுவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் வெள்ளநீர் தொடர்ந்து திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வந்து சேரும் நிலையில் – கடந்த இரண்டு நாட்களாக கொள்ளிடம் ஆற்றில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடி நீர் வெளியேறி வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் கேரளா கர்நாடகா மற்றும் தமிழக மலை சார்ந்த மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக ஏறத்தாழ 40 நாட்களுக்கும் அதிகமாக கொள்ளிடம் ஆற்றில் இதேபோல் வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது. இந்நிலையில் திருச்சி செக் போஸ்ட் அருகே உள்ள அழகிரிபுரம் மூனீஸ்வரன் கோவில் சுற்றுச்சுவர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.  ஆபத்தை உணராமல் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் இதனை வேடிக்கை பார்த்த வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.