எடப்பாடி பழனிசாமி கைதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி. ப.குமார் கைது

0 306
Stalin trichy visit

லால்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்பி ப.குமார் உள்ளிட்ட அதிமுகவினர் கைது.

திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கவிதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்பி உள்ளிட்ட அதிமுகவினர் கைது.

சட்டசபையில் பேச அனுமதிக்காதது,எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஒதுக்கீடு செய்யாதது கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முன்னால் அமைச்சர்கள்,எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அ.தி.மு.கவினர் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்த அறிவித்தனர்.

இந்தநிலையில் உண்ணாவிரத போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர்.
தடையை மீறி கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் இருக்க முயன்ற எடப்பாடி பழனிசாமி,முன்னால் அமைச்சர்கள் எம்எல்ஏ.,க்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த கைதை கண்டித்து லால்குடி ரவுண்டானாவில் தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்பியுமாண ப. குமார் தலைமையில் லால்குடி புள்ளம்பாடி ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் லால்குடியில் பேரணியாக வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது திமுக விற்கு எதிராக கட்டண கோஷங்களை எழுப்பினர்
சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்பியும் மாவட்ட செயலாளருமான ப. குமார் உள்ளிட்ட அதிமுகவினரை லால்குடி டிஎஸ்பி சீதாராமன் தலைமையில் போலீசார் 200 க்கும் மேற்பட்டோரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.