மணப்பாறையில் விதிமுறைகளை பழக்கடைகள் மற்றும் உணவகம் உள்ளிட்ட 3 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

0 149
Stalin trichy visit

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ள சூழ்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியிலும் கொரோனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இதனால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி உணவகம் செயல்பட வேண்டும் என்பதுடன் பழக்கடை உள்ளிட்ட கடைகள் திறப்பதற்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது. நடமாடும் கடைகள் மூலம் அனைத்து பகுதிகளிலும் காய்கறி, பழக்கடைகள் விற்பணை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கோவில்பட்டி சாலையில் உள்ள இரண்டு பழக்கடைகள் அரசின் விதிமுறைகளை மீறி எப்போதும் திறந்திருப்பதோடு வியாபாரம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயாவிற்கு வந்த தகவலையடுத்து இன்று வருவாய்துறை, நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பழக்கடைகளில் ஆய்வு செய்தபோது பழக்கடைகள் செயல்பட்டு வந்தது தெரியவந்ததையடுத்து கடைகளில் இருந்த பழங்களை எல்லாம் அகற்றி விட்டு இரண்டு கடைகளுக்கு சீல் வைத்தனர். இதேபோல் காய்கறி மார்க்கெட் அருகே உள்ள உணவகம் ஒன்றில் அரசின் விதிகளை மீறி செயல்பட்டதால் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட உணவகத்திற்கும் சீல் வைத்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.