விபத்து இல்லாத தீபாவளி கொண்டாட விழிப்புணர்வு பேரணி

0 232
Stalin trichy visit

.திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் ஒலி, மாசு மற்றும் விபத்து இல்லா தீபாவளியை கொண்டாட மாணவ, மாணவிகள் விழிப்புணர் பேரணியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சிக்கு காட்டுப்புத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் சாகுல் அமீது தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற தலைவர்
சங்கீதாசுரேஷ் மற்றும் துணைத்தலைவர் சுதா சிவசெல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜமீன்தார் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள்
விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். பள்ளியிலிருந்து இந்நிகழ்வில் மாணவ மாணவிகள் மாசினைக் குறைப்போம், சுற்றுச்சூழலை காப்போம், பட்டாசுகளை கவனமாகவும் விபத்தில்லாமலும்வெடிப்போம், அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சுற்றுசூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை வெடிப்போம் போன்ற உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டனர்.. இந்நிகழ்வின் போது ஜமீன்தார் மேல்நிலைப்பள்ளி தாளாளர் சந்திரமோகன் ஆசிரியர், பேரூராட்சி இளநிலை உதவியாளர்கள் பாரதியார், சித்ரா, துப்புரவு மேற்பார்வையாளர் (பொ) கண்ணன், கணினி இயக்குநர் மதுசூதனன், மற்றும் பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர்  உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.