லால்குடி அருகே மின்கசிவால் வீட்டில் தீ விபத்து

0 283
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் உள்ள முத்தமிழ் நகரில் மின்கசியினால் வீட்டில் தீப்பற்றி எரிந்ததில் பொருட்கள் எரிந்து நாசமானது.

தாளக்குடி ஊராட்சியில் உள்ள முத்தமிழ் நகரை சேர்ந்தவர் 65 வயதான சேட்டு இவருடைய மனைவி நீலாம்பாள்.சேட்டு கூலி வேலை செய்து வருகிறார்.இவரது வீட்டில் இன்று மின்கசிவினால் தீ பிடித்தது எரிந்தது. தீப்பிடித்ததால் பதறிப் போன சேட்டு சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். அப்பகுதி மக்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்.ஆனால் பொருட்கள் மீது தீப்பிடித்து எறிய தொடங்கியது.இது குறித்து பொதுமக்கள் ஸ்ரீரங்கம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.தீயணைப்புத் துறையினர் வரும் வரை காத்திருக்காமல் அப்பகுதி பொதுமக்கள் அக்கம் பக்கம் வீடுகளில் தீ பரவாமல் தடுக்க கடும் முயற்சியில் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரேடியோ, டிவி மிக்ஸி உள்ளிட்ட சுமார் 50,000 மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பல் ஆனது. கூலி வேலை செய்து சிறுக சிறுக சேமித்து வாங்கிய பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானதால் கூலித் தொழிலாளியான சேட்டு மிகவும் கவலை அடைந்தார்.அப்பகுதி பொதுமக்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.