பொது சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வு கூட்டம்
திருச்சி, அக். 26 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில், பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வு கூட்டம் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று (அக்.26) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.