தா.பேட்டை காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் மண்டல பூஜை பூர்த்தி விழா

0 242
Stalin trichy visit

.

தா.பேட்டை காசி விசாலாட்சி அம்மன் உடனமர் காசி விஸ்வநாத சுவாமி சிவாலயத்தில் மண்டல பூஜை பூர்த்தி விழா, மற்றும் 108 சங்கு அபிஷேக பூஜை நடைபெற்றது.

தா.பேட்டையில்  காசி விஸ்வநாதர் சிவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அண்மையில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  அதன் தொடர்ச்சியாக தினசரி மண்டல பூஜை பக்தர்களால் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று மண்டல பூஜை பூர்த்தி விழாவை முன்னிட்டு கணபதி பூஜை, நவகிரக பூஜை, லட்சுமி பூஜை, யாகவேள்வி, வேதபாராயணம்,
உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
அப்போது 108 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் காசி விஸ்வநாதர் மற்றும் காசி விசாலாட்சி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அப்போது உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்கவும், பக்தர்கள் சுபிட்சமாக வாழ்ந்திடவும் ,
மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழில் வளம் மேம்படவும் பிரார்த்தனை நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.