திமுக செயல் வீரர்கள் கூட்டம் : மத்திய மாவட்ட செயலாளர்  அழைப்பு

0 366
Stalin trichy visit

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் 31ஆம் தேதி திமுக செயல் வீரர்கள் கூட்டம்.
நிர்வாகிகள் பங்கேற்க மத்திய மாவட்ட செயலாளர்  வைரமணி அழைப்பு.

திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி கூறியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்கள் கூட்டம்
31. 10. 22 திங்கட்கிழமை காலை 9 மணி அளவில் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட அவைத் தலைவர் பேரூர். தர்மலிங்கம் தலைமையிலும், கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர். கே. என் .நேரு முன்னிலையிலும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர பகுதி, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள் மற்றும் செயல்வீரர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்குமாறும், தமிழக முதல்வரும், கழகத் தலைவருமான மு.க .ஸ்டாலின் 4.11. 2022 தேதி திருச்சியில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் பூத் கமிட்டி அமைத்தல், கழக ஆக்கப் பணிகள் குறித்து முடிவு எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.