இந்தி திணிப்புக்கு எதிராக மாணவர் பெருமன்றம் போராட்டம்

0 251
Stalin trichy visit

இந்தி திணிப்புக்கு எதிராக ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சார்பில் 27. 10.2022 இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் வாயில் முன் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் எம்.செல்வகுமார், அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் க.இப்ராஹிம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா, அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலத் துணைச் செயலாளர் ஜி.ஆர். தினேஷ்குமார், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் ஆநிரைச்செல்வன், பேராசிரியர் நெடுஞ்செழியன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். மேலும் இடைக்கமிட்டுச் செயலாளர்கள் எம்.ஆர். முருகன், இரா.சுரேஷ் முத்துசாமி, சையது அபுதாஹிர் மற்றும் இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் ஆர்.முருகேசன், மாணவர் மன்ற மாவட்ட தலைவர் பாட்ஷா மற்றும் தாஸ், மார்க்சிம் கார்கி, விஜி, ஏர்போர்ட் பகுதி பொறுப்பாளர் ராஜா, மேற்கு பகுதி குழு உறுப்பினர் ஆனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக இளைஞர் பெருன்ற மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.