தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில்

0 386
Stalin trichy visit

மாநகராட்சி கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய மாமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் செந்தில்

இந்திய வரலாற்றிலேயே மக்களுக்கான ஓர் இயக்கம், சமூக நீதிக்கான ஓர் இயக்கம் உண்டு என்று சொன்னால் அது நம் தி.மு.க.தான், அத்தகைய பெருமை வாய்ந்த இயக்கத்தின் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இரண்டாம் முறையாக தலைவராக பொறுப்பேற்றமைக்கும், மாண்புமிகு முதன்மை செயலாளருக்கும், “மக்கள் போற்றும் மகேஸர்”மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளராகவும், மாநகர செயலாளராக 3-ம் மண்டலத் தலைவர் மு.மதிவாணன் ஆகியோருக்கும் இத்தகைய சிறப்பு வாய்ந்த மாமன்றத்தில் வாழ்த்துக்கள் சொல்லி பெருமை அடைகிறோம்,

அதேபோல் எமது பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நிகழ்வதால் அனை தடுக்கும் விதமாக மாநகரத் தந்தை தாங்களும் ஆணையர் அவர்களும் காவல்துறை அதிகாரிகளிடம் பேசி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,

எமது பகுதியில் இருக்கின்ற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவர் உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு,மழைக்கு முன்னாள் போர்க்கால அடிப்படையில் சாக்கடை வசதியை சீரமைக்க வேண்டும் என்றும்,ஜே.சி.பி.யின் தேவைகள் அதிமாக இருப்பதால் அதனையும் ஏற்பாடு செய்து தர வேண்டியும், பால்பண்ணை முதல் திருவெறும்பூர் வரை உள்ள பகுதிகளுக்கு கூடுதலாக நிதியினை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.