தொட்டியம் பகுதியில் இன்று மின் நிறுத்தம்
முசிறி,அக்.31 திருச்சி மாவட்டம் தொட்டியம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இத்துனை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் தொட்டியம், அரங்கூர், எம்.புத்தூர், ஏழூர்பட்டி, காமலாபுரம், தோளூர் பட்டி, காடுவெட்டி,எம். களத்தூர், மேய்க்கல் நாயக்கன்பட்டி, பாலசமுத்திரம், தலைமலைபட்டி, காட்டுப்புத்தூர், நத்தம், ஸ்ரீராம சமுத்திரம்,முருங்கை, உண்ணியூர் கொளக்குடி அம்மன் குடி பூலாஞ்சேரி அப்பன நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை திங்கள்கிழமை அக்டோபர் 31ஆம் தேதி காலை 9:45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என முசிறி மின்வாரிய இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் எப்.எக்ஸ் மேரி மேங்டலின் பிரின்ஸி சனிக்கிழமை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.