முதலமைச்சர் வருகை: முத்தப்புடையான் பட்டி கிராம மக்கள் அவசர ஆலோசனை கூட்டம்
முத்தப்புடையான் பட்டி அருகில் முதலமைச்சர் திருச்சி வருகை சம்மந்தமாக அவசர கூட்டம் நடந்தது.
இதில் வரும் 1ம் தேதி திருச்சியில் TNPL பகுதி மக்கள் நல சங்கம் சங்கம் சார்பில் பத்திரிக்கையார்ளை சந்தித்து நமது பகுதி மக்கள் TNPL ஆலையினால் ஏற்படும் பிரச்சனைகளை தெரிவிக்க முதல்வரிடம் நேரில் சந்திக்க அனுமதி கோருவது!
மேலும் ஆட்சியரிடம் முதல்வரை சந்திப்பது தொடர்பான கோரிக்கை மனுவை அளிப்பது.
நமது கோரிக்கையை உதாசினப்படுத்தினால் அனைத்து கிரமங்களிலும் வீடுகள் தோறும் கருப்புகோடியை ஏற்றி முதல்வரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது!
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.