மணப்பாறையில் நடைபெற்ற நகர சபை கூட்டம்

0 408
Stalin trichy visit

மணப்பாறையில் நடைபெற்ற நகர சபை கூட்டம், நூலகம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பெண் அமைத்து தருவதாக உறுதி எம்எல்ஏ.

திருச்சி மாவட்டம் மணப்பாறை 25 ஆவது வார்டு ராஜீவ் நகர் அப்பு ஐயர் குளம் சிவன் கோவிலில் மணப்பாறை நகராட்சி நகர சபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது மற்றும் நகர்மன்ற தலைவர் கீதா மைக்கேல் ராஜ் நகராட்சி ஆணையர் சியாமளா ஆகியோர் கலந்து கொண்டு அந்தப் பகுதியில் உள்ள குறைகளை கேட்டு மனுக்களாக பெற்று அந்த மனுக்களுக்கு எவ்வாறு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் விளக்கம் அளித்தார்கள்,

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெண் ஒருவர் நூலகத்தைப் பற்றிய விளக்கம் அளித்து இந்த பகுதிக்கு ஒரு நூலகம் வேண்டும் என்று வேண்டுகோள் வைத்து மனு வழங்கினார்,
அந்த வேண்டுகோளை ஏற்ற மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் இந்த பகுதிக்கு மிக விரைவாக ஒரு நூலகமா அமைத்து தரப்படும் என்றும் உறுதி கூறினார். அதேபோல் அந்த பகுதியில் உள்ள அப்பு ஐயர் குளத்தில் தற்போது தூர்வாவுப் பணிகள் நடைபெற்று வருகிறது இந்தப் பணிகளில் மழை தண்ணீர் இந்த குலத்திற்கு உள்வழிப்பாதை மற்றும் வெளிச்செல்லும் பாதைகள் எவ்வாறு அமைக்கப்படும் என்றும் நகர்மன்ற தலைவர் விளக்கி கூறினார்,
அந்தப் பகுதியில் ஒரு உடற்பயிற்சி நிலையம் மற்றும் பாத்திமா மலை பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பொதுமக்கள் கூறிய கோரிக்கை அதேபோல் 15 நாளைக்கு ஒருமுறை குடிநீர் வருகிறது என அங்கு வந்த இந்த கூட்டத்தில் உள்ள ஒருவர் கூறியதால் உடனடியாக அதை சரி செய்து தண்ணீர் வழங்கி இருக்கிறோம் என கூறினார்கள் மற்றும் மனுக்களைப் பெற்றுக் கொண்டு மிக விரைவாக செயல்படுத்தப்படும் என்று உறுதி அளித்தார்கள்.

இந்த நிகழ்ச்சி நிறைவாக நகராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் மணி முத்து கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி உரை கூறி நகர சபை கூட்டம் நிறைவு பெற்றது.

Leave A Reply

Your email address will not be published.